நீலகிரியில் மற்றொரு பசுமாட்டை கொன்றது புலி! – பீதியில் உறைந்துள்ள மக்கள்!

திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:19 IST)
நீலகிரியில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஒரு பசுமாட்டை அது கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் காட்டுப்புலி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். முன்னதாக இந்த புலி கூலி வேலை பார்க்கும் நபர் ஒருவரை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே ஒரு பசுமாட்டை கொன்ற புலி தற்போது மீண்டும் ஒரு மாட்டை கொன்றுள்ளது. இந்நிலையில் ஊருக்குள் புலி அட்டகாசம் செய்து வருவதால் அதை பிடிக்க வனத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா புலியை பிடிக்கும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தேவையான உணவை வீடுகளுக்கே கொண்டு வந்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் புலி பிடிபடும் வரையில் பேருந்து சேவையையும் நிறுத்தி வைக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்