மதுரையில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரிடம் NIA அதிகாரிகள் சுமார் 4 நேரம் விசாரணை நடத்திய நிலையில், செல்போன், சிம்கார்டு, மற்றும் புத்தகம் ஒன்றை கைப்பற்றி சென்றனர்.
சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக முகம்மது அப்துல் அஜிமிடம் விசாரணை செய்து புறப்பட்டுசென்றனர். அவரிடம் முந்தைய வழக்குகள் தொடர்பாகவும், மற்றும் சமூகவலைதளங்களில் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்திய பின்னர் செல்போன், சிம்கார்டுகள் மற்றும் புத்தகம் ஒன்றையும் பறிமுதல் செய்து சென்றனர்.
NIA அதிகாரிகள் சோதனை நடத்தியபோது திடீர்நகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய முகம்மது அப்துல் அஜிம் என்பவரது மீது விளக்குத்தூண் காவல்நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பாக சுவரொட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய இளைஞர்களுக்கு NIA தொந்தரவு:
NIA அதிகாரிகளின் விசாரணை குறித்து பேசிய முஸ்லிம் ஜமாத் செயலாளர் அயாஸ், NIA அதிகாரிகள் தேர்தல் நேரம் என்பதால், சமூக பணிகளில் ஈடுபடும் இளைஞர்களை அலைக்கழித்து சோதனை நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினர்.