ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்: தாமாக முன்வந்து என்.ஐ.ஏ விசாரணை..!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:18 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் மாளிகை முன்  பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரக் குறித்து என்.ஐ.ஏ தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் மடக்கி பிடித்ததாகவும் விசாரணையில் அவர் ரவுடி கருக்கா வினோத் என்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில்  அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை காரணமாகத்தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பேசியதாக கருக்கா வினோத் கூறியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை தாமாக முன் வந்தது என்.ஐ.ஏ விசாரணையை தொடங்கியுள்ளது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தாமாக முன்வந்து என்.ஐ.ஏ விசாரணை தொடங்கி உள்ளதால் தமிழக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்