இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கோவையில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் சில இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவான சில ஆவணங்கள் சிக்கியதாகவும் அதன் அடிப்படையில் என்ஐஏ தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமீல் பாஷா உமரி, மவுலவி ஹுசைன் ஃபைசி, இர்ஷாத், சையத் அப்துர் ரஹ்மான் உமரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த சோதனையின் போது சில மின்னணு சாதனங்கள், மற்றும் ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும், மேலும் 6 லேப்டாப், 25 செல்போன்கள், 34 சிம் கார்டுகள், 6 எஸ்.டி (மெமரி) கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.