சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடியில் சமூக விரோதிகள் ஊடுருவியதே போராட்டம் கலவரமாக மாற காரணம் என்று கூறியதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல் நெட்டிசன்கள் வரை விமர்சனம் செய்து வருகின்றனர். போராட்டம் நடந்த போது ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்களை சமூக விரோதிகள் என்று அழைக்காமல் அவர்களை தியாகிகள் என்றா அழைக்க முடியும்?
இத்தனை நாட்களாக தூத்துக்குடியை மாசுபடுத்தியது சமூக விரோதிகள் என அடுத்து கூறுவார்கள்' என்று சித்தார்த் ஒரு டுவீட்டில் கூறியுள்ளார். சித்தார்த் புரிந்து தான் இந்த டுவீட்டை போட்டுள்ளாரா? என்று தெரியவில்லை. இத்தனை நாட்களாக தூத்துக்குடியை மாசுபடுத்தியது ஸ்டெர்லைட் நிறுவனமே என்பதால் அவர்களும் சமூக விரோதிகள் தானே! இவர் ரஜினியை கலாய்ப்பதாக நினைத்து கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக டுவீட் போட்டிருப்பதாக பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.