விருந்துக்காக தாய்மாமன் வீட்டுக்கு சென்ற புதுமண தம்பதிகள் பரிதாப பலி: தேனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (15:59 IST)
விருந்துக்காக தாய்மாமன் வீட்டுக்கு சென்ற புதுமண தம்பதிகள் பரிதாப பலி: தேனியில் அதிர்ச்சி சம்பவம்!
புதிதாக திருமணமான தம்பதிகள் விருந்துக்காக தாய் மாமா வீட்டிற்கு சென்று இருந்த போது ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சமீபத்தில் காவியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததை அடுத்து ராஜாவின் தாய்மாமா வீட்டிற்கு விருந்திற்காக புதுமண தம்பதிகள் சென்றனர்
 
அப்போது அருகில் உள்ள பெரியாற்று கோம்பை என்ற ஆற்றில் குளிப்பதற்காக புதுமண தம்பதிகள் சென்றபோது திடீரென ஆற்றுநீர் இருவரையும் அடித்து சென்றது. அவர்களை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
 
இதுகுறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் புதுமண தம்பதிகளை பிணமாக மீட்டனர். திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் புதுமண தம்பதிகள் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்