2 நாள் கழிச்சு இல்ல.. இன்றைக்கே அபராதம்தான்! – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

புதன், 26 அக்டோபர் 2022 (08:25 IST)
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி புதிய அபராதங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலே அது நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகளும், புதிய அபராதகங்களும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் மற்றும் அபராதங்கள் குறித்த விவரங்கள் முன்பே வெளியானாலும், இந்த புதிய நடைமுறைகள் 28ம் தேதிக்கு மேல் அமலுக்கு வரும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இரண்டு நாட்கள் முன்னதாக இன்று முதலே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இன்று முதல் புதிய விதிமுறைகளின்படி அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து மக்கள் பலரும் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்