பெரிய கோவிலில் தமிழ் குடமுழுக்குதான் வேணும்! – களம் இறங்கிய நெட்டிசன்கள்!

செவ்வாய், 21 ஜனவரி 2020 (09:21 IST)
தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் ஹேஷ்டேகுகள் இட்டு ட்ரெண்டிங் செய்ய தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தின் பழம்பெரும் அடையாளமாக விளங்குவது தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில். பெரிய கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜசோழன் என்ற சோழ அரசர் கட்டினார். கடந்த சில மாதங்களாக பிரகதீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில் புதிய பிரச்சினைகள் தொடங்கியுள்ளன.

கோவில் குடமுழுக்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்காமல் தமிழ் பாராயணங்களை பாடியே குடமுழுக்கு செய்ய வேண்டும் என குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. இதுகுறித்து பேசிய தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ”ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறும் வழக்கத்தை மாற்றமுடியாது. இதுகுறித்து இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் விவாதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், மக்களும் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்