ஆஸி அணிக்கு எதிரான தொடரின் மூன்று போட்டிகளிலும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரலாறு காணாத அளவுக்கு சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி (கோல்டன் டக்) மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
முன்னதாக சூர்யகுமார் யாதவ் பற்றி பேசிய பயிற்சியாளர் டிராவிட் “சூர்யகுமார் அதிகமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. மிகவும் கடினமான டி 20 போட்டிகளிலேயே அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். அதனால் ஒருநாள் போட்டிகளில் அவரை இன்னும் சில போட்டிகள் விளையாட வைத்து நாம் காத்திருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.