விபத்து நடந்த நெல்லை பள்ளிக்கு விடுமுறை - பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (12:16 IST)
நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பலி பலியாகியுள்ளனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியாகியதால் நெல்லை டவுன் சாப்டர் பள்ளியை சுற்றி பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்து வருகிறார். 
 
இந்த விபத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகிய இருவர் உயிரிழந்து உள்ளனர். 100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்நிலையில் தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்