புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முதல் கட்ட போலீசார் விசாரணையில் இருட்டுக்கடை அல்வா கடை அதிபர் ஹரிசிங் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
நெல்லைக்கு சுற்றுலா செல்பவர்கள் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் இருட்டுக்கடை அல்வா புகழ் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரி ஹரிசிங் அவர்களுக்கு திடீரென கொரோனா உறுதியான தகவல்கள் வெளிவந்தது
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் சற்றுமுன் தற்கொலை செய்து கொண்டார். கொரோனாவால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இருட்டுக்கடை அல்வா ஹரி சிங் தற்கொலை நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது