நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – இடைத்தரகர் கேரளாவில் கைது !

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:29 IST)
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவருக்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றி வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அந்த மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில்  போலிஸார் வழக்கு விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருப்பதியில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.

மாணவர் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில் ஆள்மாறாட்டத்துக்கு உதவியாக இருந்த இடைத்தரகரைக் கைது செய்ய போலிஸார் கேரளா விரைந்தனர். அங்கு ஜோசப் எனும் என்பவரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் விசாரணை நடத்தி சூர்யாவுக்குப் பதில் தேர்வு எழுதிய நபரைப் பற்றிய விவரங்களைப் பெற்று அவரைத் தேட உள்ளனர்.

இந்நிலையில் ஆள்மாறாட்டத்தில் மேலும் 5 பேர் வரை ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்