அதன் பிறகு நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்பு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் மஞ்சள் வைத்து, மற்றொரு பகுதியில் குங்குமம் வைத்து நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் நிலைப்படியின் இருபுறமும் வைக்க வேண்டும். பிறகு நிலைப்படியின் இருபுறமும் பூ வைக்க வேண்டும்.
இவ்வாறு ஏற்றுவதால் நமக்கு குபேரனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள், துன்பங்கள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் பனி போல் கரையும். இந்த குபேர விளக்கு ஏற்றும் முறையை வார வாரம் வியாழக்கிழமைகளில் செய்து வர எல்லா வளங்களும் நமக்கு கிடைக்கும்.