இந்த சூழலில் அதிமுகவை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் பல சதிகள் நடப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட நடராஜன் மீண்டும் போயஸ் கார்டன் பக்கம் வந்துள்ளார். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற அவர் பல ரகசிய திட்டங்கள் தீட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னரும் அதிமுக சிதற வேண்டிய சூழல் வந்த போது இதே நடராஜன் தான் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்து கட்சியை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. நடராஜனும், திருநாவுக்கரசரும் சேர்ந்து அதிமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார்கள் அப்போது.
இப்பொழுதும் அது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதால் அதே கூட்டணி தற்போது ஒன்று சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நடராஜனும், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் சேர்ந்து அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.