தீபா அந்த வேலையை பார்க்கலாம் - விளாசிய நாஞ்சில் சம்பத்

புதன், 29 மார்ச் 2017 (15:48 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வந்துள்ளது பற்றி, அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக இரு அணிகளாக உடைந்து, தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் இரட்டை மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். அதேபோல், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா படகு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், சசிகலாவின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் சமீபத்தில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவர் ஓ.பி.எஸ், தீபா ஆகியோருக்கு எதிராக பல கருத்துகளை கூறினார். 


 

 
சசிகலா அரசியலுக்கு வந்தது சரியான ஒன்றுதான். அதுதான் ஜெயலலிதாவுடனான நட்புக்கு கிடைத்த மரியாதை. மியான்மர் அதிபர் ஆங்சாங் சூகி 11 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அப்படித்தான் சசிகலாவும். அவர் மீண்டும் வருவார். 
 
ஆனால், ஜெ.வின் அண்ணன் மகள் என்பதற்காகவே தீபா அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  கழகத்திற்காக அவர் என்ன தியாகம் செய்தார்? அவர் செய்த சேவை என்ன? அவருக்கும் அதிமுகவிற்கும் என்ன தொடர்பு? என அவர் கேள்வி எழுப்பினார்.
 
மேலும், பத்திரிக்கை தொடர்பான கல்விப் படிப்பை அவர் படித்திருப்பதால், பத்திரிக்கையாளர் பணியை அவர் தொடரலாம் என கருத்து தெரிவித்தார். அதேபோல், ஓபிஎஸ் ஒரு நடிகர், ஆஸ்தன் பூபதி, அம்பள குடுக்கை என வசை பாடினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்