ஊற்றிக் கொடுப்பது டிடிவியின் குலத் தொழில் - சிவி சண்முகதிற்கு பதிலடி

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (09:51 IST)
கூவத்தூரில் எங்களுக்கு டிடிவி தினகரன் ஊத்திக் கொடுத்தார் என்று பேசிய அமைச்சர் சிவி சண்முகத்திற்கு பதிலடி..!
 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது கூவத்தூர் ரிசார்ட். அங்கு எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சேர்ந்து அடித்த கூத்துகளும், சரக்கு பாட்டில்களுடன் அவர்கள் உட்கார்ந்திருந்த புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் கூவத்தூரில் குடித்து விட்டு கூத்தடித்தோம் என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் அமைச்சர் சிவி சண்முகம் ஊற்றிக் கொடுப்பது டிடிவி தினகரனின் குலத் தொழில் ஊத்திக் கொடுத்தே குடியைக் கெடுப்பார் என காட்டமாக பேசியுள்ளார். 
 
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு பதிலடி கொடுத்துள்ள நமது எம்.ஜி.ஆர் நாளேடு பெயரை குறிப்பிடாமல் அவர் ஓர் மனநோயாளி எனவும், அவரை பற்றி விமர்சனம் செய்வது மரபு அல்ல என்றும் கார்டூன் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்