2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

Mahendran

திங்கள், 19 மே 2025 (10:04 IST)
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதை அடுத்து நான்கு அணிகள் போட்டியிடும் என்று தெரிகிறது. 
 
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை தனித்து களம் காணும் என்றும், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் சீமான் கூறியுள்ளார். கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
2016 ஆம் ஆண்டில் ஒரு சதவீதம் மட்டும் ஓட்டுகளை பெற்று, தற்போது 2024 ஆம் ஆண்டில் 36 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இதனை அடுத்து, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, விஜய் கட்சி தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு அணிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்