தேர்தல் செலவுக்கு மக்களிடம் வசூலித்த ’’நாம் தமிழர்’’ வேட்பாளர்
புதன், 24 மார்ச் 2021 (22:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் எப்போதும் போலவே இம்முறை சீமாவின் நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்கவுள்ளது. சமீபத்தில் பெரும்பான்மையான வேட்பாளர்களை மேடையில் சீமான் அறிமுகம் செய்த நிலையில் தற்போது மேலும் சில வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறார்.
எனவே திருத்துறைப் பூண்டி தொகுதியில் போட்டியிடும் 38 வயதான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆர்த்தி வாக்கு சேகரிப்பின் போது மக்கள் மற்றும் வணிகர்களிடம் தேர்தல் துண்டு பிரசுரம் உள்ளிட்ட தேர்தல் செலவிற்காக பணம் வசூல் செய்தார்.
சீமான், மக்களின் தேவைகளை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றுவேன் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.