ஓபிஎஸுக்கு எனது ஆதரவு இல்லை: தீபா அதிரடி அறிவிப்பு!

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (18:20 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே அறிவித்திருந்தார்.


 
 
அதன்படி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். இதில் தான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாக கூறி அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தீபா முன்னதாக ஓபிஎஸை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்து பேசி அவரது வீட்டுக்கு சென்றதை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவருடன் கூட்டணி இல்லையா என கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதில் அளித்த தீபா ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி எல்லாம் இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து என்னை பற்றி பேசி வந்தார். அதனால் மரியாதை நிமித்தமாக அவரை சென்று சந்தித்தேன் என கூறினார்.
 
மேலும் செய்தியாளர்கள் அது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் பான்னீர்செல்வத்துடன் கூட்டணி வைப்போமா என்பதை காலம் தான் பதில் சொல்வோம் என்றார். மேலும் தான் ஆரம்பித்திருப்பது கட்சி அல்ல இது ஒரு அமைப்பு மட்டும் தான் என்பதை அவர் உறுதிபடுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்