இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்-டிடிவி. தினகரன்

சனி, 21 அக்டோபர் 2023 (12:40 IST)
ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும் என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல திட்டத்தின் மாதிரி சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என டிடிவி. தினகரன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 
 
''ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணித்து வங்கக் கடலில் இறங்கியுள்ளது.
 
ககன்யான் திட்டம் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்ப உள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
 
முதற்கட்ட சோதனையைப் போலவே அடுத்தடுத்த சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையைப் படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்