ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது: முத்தரசன்
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:59 IST)
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என முத்தரசன்தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனையடுத்து நீதிமன்றம் சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்க்கு நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது
இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடை பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடப்பதற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்