கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் ஐ மிஞ்சிடும் பதான் பட டீசர்.

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:38 IST)
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ திரைப்படத்தின் டீசர் சூப்பராக உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் , இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படம் பதான். இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமீபத்தில் பாதன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வைரலானது.

இந்த நிலையில், யஷ்ராஜ் பிலிம்ஸின்  50 வது   ஆண்டை( தொடக்கம் 1970)  விழாவை சிறப்பிக்கும் வகையில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, ரிலீசாகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, இப்படத்தில் ஜான் ஆப்ரகாமின் போஸ்டரையும் சமீபத்தில் படக்குழு ரிலீஸ் செய்தது.

இப்படத்தின்  டீசர் மற்றும் டிரெயிலர் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பிரபல ஊடகவியலாளர் உமர் சந்து ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், பதான் பட டீசர், கேஜிஎஃப்,ஆர்.ஆர்.ஆர் , பாகுபாலி போன்ற பிரமாண்ட பட  படங்களுக்கு எல்லாம் தந்தையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மீண்டும் இப்படத்தின் மூலம் கிங் கானாக வலம் வருவார் எனவும், இப்படம் சினிமாவில் புதிய ஆக்சனுக்கான தொடக்கம்மாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj
 

#Pathaan Teaser = Father of #KGF, #Baahubali, #RRR & etc etc !!

Best Come back film ever for King

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்