தற்பொழுது மீம் கிரியேட்டர்கள் அரசியல் பிரமுகர்களின் பேட்டியை கலாய்த்து மீம்ஸ்களாகவும், அவர்கள் பேசியதை எடிட் செய்து அதனை வீடியோவாகவும் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதற்கு மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. அப்படி அன்றாடம் அதிமுகவில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களர்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை வைத்து மீம் கிரியேட்டர்கள் சரமாரியாக மீம்ஸை போட்டுதள்ளுவர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டிக்கு மீம் கிரியேட்டர்கள் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு காத்திருப்பது போல அவர்கள் காத்திருக்கிறார்கள் எனவும் மீம்ஸ்களின் லேடி சூப்பர் ஸ்டார் தமிழிசை எனவும் அவரது பேட்டி எப்போது வரும் அதை வைத்து எப்படி மீம் போடலாம் என மீம் கிரியேட்டர்கள் காத்துக் கொடிருப்பதாகவும் கூறி தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது.