கலெக்டர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு:-

J.Durai

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (08:17 IST)
திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள வார்டுகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது
 
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த திருச்சி மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் கிராமம் புங்கனூர்  ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் ஊராட்சி முக்கியஸ்தர்கள் புங்கனூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்தனர் இதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திருச்சி மாநகராட்சி உடன் மாடக்குடி ஊராட்சியை இணைப்பதை கண்டித்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
மேலும் இது குறித்து தகவல் இருந்து வந்த அரசு அதிகாரிகள் ஊர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் இதற்கான தீர்வு காணப்படும் என தெரிவித்ததின் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கி விட்டு சென்றனர் இந்த முற்றுகை போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை பரபரப்பாக காணப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்