திடீரென டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமருடன் முக்கிய ஆலோசனையா?

Siva

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:30 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளதாகவும் அங்கு அவர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே பனிப்போர் நிகழ்ந்த நிலையில் சுதந்திர தினத்தில் ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார் என்பதும் அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜக அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் திடீரென ஆர்.என்.ரவி  டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்த நிலையில் அவர் தொடர்ந்து ஆளுநராக நீடித்து வரும் நிலையில் டெல்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களையும் சந்திக்க இருப்பதாகவும் அதன் பின்னர் நாளை சென்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் ஆளுநராக பதவி நீடிப்பதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்