கட்டுகட்டாக பணம் பட்டுவாடா: தினகரன் தரப்பை கையும் களவுமாக பிடித்த ஓபிஎஸ் தரப்பு!

திங்கள், 27 மார்ச் 2017 (15:15 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பலரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


 
 
ஆர்கே நகர் தொகுதியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் டிடிவி தினகரன். ஆனால் கள நிலவரம் அவருக்கு எதிராகவே உள்ளது. கூடவே ஓபிஎஸ், திமுக தரப்பு பிரச்சாரங்கள் தினகரனுக்கு மேலும் குடைச்சலை கொடுத்து வருகிறது.
 
இந்நிலையில் தினகரன் தரப்பு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக, ஓபிஎஸ் தரப்பு மற்றும் திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தினகரன் தரப்பினர் முற்றிலுமாக மறுக்கின்றனர்.
 
இந்நிலையில் ஆர்கே நகரின் 42-வது வட்டம் கோதண்டராமன் தெரு டோபிகண்ணாவில் உள்ள வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கட்டுகட்டாக பணம் பட்டுவாடா செய்ததாக தகவல் ஓபிஎஸ் அணிக்கு சென்றுள்ளது. விரைந்து சென்ற ஒபிஎஸ் அணியினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதனால் இரு அணியினருக்கும் இடையே வாக்குவாதம் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்