அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்ல வேண்டாம்: முதல்வரின் பிரஸ் டே வாழ்த்து!

புதன், 16 நவம்பர் 2022 (12:17 IST)
தேசிய பத்திரிக்கையாளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 அந்த வகையில் இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 
 
அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு #NationalPressDay வாழ்த்துகள்! 
 
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்