சொத்துவரி உயர்வினால் பாதிக்கப்படுவது சொத்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, வாடகைக்கு வீட்டில் குடியிருப்பவர்களும் கூட ஏனென்றால் வாடகை கட்டணத்தினை உயர்த்துவார்கள், ஆகவே ரூ 5 ஆயிரம் வீட்டு வாடகை என்றால் வீட்டு வாடகைக்கு செல்ல முடியுமா ? அது போல மக்கள் மீது அனைத்து வரிகளையும் திணித்து உயர்த்தாதீர்கள். உங்களை சுற்றி நடக்கும் போலி நாடகத்தினை முதலில் விலக்கி எறியுங்கள், மக்களின் பிரச்சினை என்ன ? அதனை விட்டு துதி பாடும் அமைச்சர்களை முதலில் மாற்றுங்கள், உங்கள் கட்சி அமைச்சருக்கு அது தெரியவில்லை என்றால் மாற்று கட்சியிலிருந்து தூக்கி அவர்களுக்கு அமைச்சர் பதவி என்று திமுக கட்சி தற்போது உள்ளது.
அதை விட, இங்குள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக வில் இருக்கும் போது, அப்போதைய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், இவருக்கெல்லாம் அமைச்சர் பதவியா ? என்று இதே கரூர் மாவட்ட்த்தில் தான் வந்து கேட்டார்கள்., தற்போது அவரே முதல்வர் ஆனதுடன் அவருக்கே அமைச்சர் பதவியையும் போட்டு கொடுத்துள்ளீர்கள் மக்கள் என்ன ? முட்டாள்களா ? அதே போல, கரூர் மாவட்டத்தில் எத்தனை மாநகராட்சியில் எத்தனை செயலாளர்கள், அதில் எத்தனை நபர்கள் உண்மையான திமுக விலிருந்து வந்தவர்கள். ஆகவே திமுக கட்சியினரையே புலம்ப வைத்த அமைச்சர் தான் செந்தில்பாலாஜி என்றும் அவர் தெரிவித்தார். ஆகவே விரைவில் திமுக கட்சியினர் பாஜக பக்கம் வரும் சூழலும் கரூரில் எழுந்துள்ளது. ஆகவே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையா ? என்ற சூழல் எழுந்துள்ளது. கோவையில் நடந்த குண்டுவெடிப்பு ஒன்று போதும் இவர்களது ஆட்சியின் லட்சணத்தினை விளக்க, குண்டுவெடிப்பினை விபத்து என்று போலீஸார் கூறியதை ஆதரப்பூர்வமாக வெளிக் கொண்டு வந்ததே நம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், நம் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே என்றதையும் சுட்டிக்காட்டினார். சாதாரண கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்று மறைக்க முயன்றது தமிழக காவல்துறை, ஆகவே சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது.
மேலும், ஆங்காங்கே வழிப்பறிகளும், திருட்டுகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு சில போலீஸார் நேர்மையுடன் விளங்கும் நேரத்தில் ஒரு சில காவல்துறையினர் அதனை மறைக்க முயல்கின்றனர். கரூரில் நடைபெற்ற செல்போன் வழிப்பறியையே, செல்போன் தொலைந்து விட்டதாக புகார் கொடுங்கள் கண்டுபிடித்து தருவதற்கு உதவுகின்றோம் என்றும் காவல்துறையினர் கூறுவதனை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைத்ததோடு, காவல்துறையினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என்றும், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பொருட்களை மீட்க முன் வாருங்கள் என்றும் கோரிக்கையாகவும் தெரிவித்தார். பாவம் அப்பாவி மக்கள் என்றும் தினந்தினம் திருட்டு பயம் மற்றும் வழிப்பறிகளில் இருந்து அதிலிருந்து தப்பித்து வாழ்ந்து வருவதனையும் சுட்டிக்காட்டினார்.