கொரொனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்து கொண்டார் முக ஸ்டாலின்!

வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:37 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
 
எனவே, சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரொனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்து கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்