எதிர்க்கட்சி துணை தலைவர் ஆகிறார் ஆர்.பி உதயகுமார்: முதல்வர் வேண்டுகோளை ஏற்ற சபாநாயகர்..!

Mahendran

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (15:25 IST)
அதிமுகவில் இருந்த ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சட்டமன்றத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி காலியாகவே உள்ளது. 
 
இந்த பதவியை நிரப்பி தர வேண்டும் என அதிமுக பலமுறை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர் பி உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து சபாநாயகர் பரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
 
இதனை அடுத்து முதல்வரின் பரிந்துரையை அடுத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். எனவே ஆர் பி உதயகுமார் விரைவில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்