வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்.. தலைநிமிர்ந்து வருகிறேன் தலைவரே! – மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

வியாழன், 3 ஜூன் 2021 (08:27 IST)
இன்று தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உள்ள நிலையில் தொண்டர்கள் வீடுகளில் இருந்தபடியே கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செய்து பிறந்தநாளை எளிமையாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகவும், தற்போது தொண்டர்களுடன் தலைநிமிர்ந்து வருவதாகவும் பேசியுள்ளார்.

தலைநிமிர்ந்து வருகிறேன்! #KalaignarForever https://t.co/4HzvtEGo5u

— M.K.Stalin (@mkstalin) June 3, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்