கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

வியாழன், 3 ஜூன் 2021 (07:37 IST)
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் 
 
இந்திய அளவில் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் கருணாநிதி என்றும், இது அவருடைய முதன்மையான சாதனை என்றும் அதனால் அவருடைய பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
மேலும் பெரியார் அண்ணா பாசறையில் வளர்ந்தவர் என்றும் மாநில, மத்திய அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர் என்றும் மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் என்றும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு உயிர் அளித்தவர் என்றும் கருணாநிதி அவர்களுக்கு திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார் 
 
கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற திருமாவளவன் கோரிக்கையை தமிழக முதல்வர் என்று ஏற்று அறிவிப்பு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்