மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தற்போது நாடு முழுவதும் போராடி வரும் எதிர்க்கட்சிகள், இந்த சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது எங்கே போயின என்று தெரியவில்லை
குடியுரிமை சீர்திருத்த சட்டம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது 80எம்பிக்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர். திமுக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை. மக்களவையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தற்போது குடியுரிமை சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகே போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தவிருக்கும் இந்த போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதால் இந்த போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும் போலீசாரும் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது