இந்நிலையில் ட்விட்டரில் திமுகவினருக்கு அறிக்கை விடுத்துள்ள மு.க.ஸ்டாலின் “பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்! அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர்! மக்களைப் பாதுகாப்பது நமது கடமை!” என்று கூறியுள்ளார்.