காந்தியை தேடாமல் நாமே காந்தி ஆவோம்! – கமல்ஹாசன் ட்வீட்!

ஞாயிறு, 30 ஜனவரி 2022 (11:13 IST)
மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று பலரும் அவருக்கு மரியாதை செய்து வரும் நிலையில் கமல்ஹாசன் அவர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அகிம்சை போராட்டத்தை கை கொண்டவரான மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது உருவ படத்திற்கு அரசியல் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாத்மா காந்தி குறித்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்