எச்.ராஜாவுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு: 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அரசியலா?

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:58 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி காரைக்குடியில் திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியை பிடிக்க முயல்வதாகவும், அதிமுகவை மறைமுகமாக இருந்து இயக்குவதாகவும், மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களையும் பகிரங்கமாக விமர்சித்து வருகிறது திமுக.
 
இந்நிலையில் திமுகவில் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் திமுகவில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தற்போது திடீரென காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை சந்தித்து பேசியுள்ளார்.
 
மூன்று ஆண்டுகளாக அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் அழகிரி தற்போது எச்.ராஜாவை சந்தித்து உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் நிமித்தமான சந்திப்பா அல்லது எச்.ராஜாவின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க சென்ற சந்திப்பா என்ற இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்