மீடூ புகாரில் சிக்கிய எம் ஜெ அக்பர் பதவி விலகினார்

புதன், 17 அக்டோபர் 2018 (16:59 IST)
இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடி தலைமயிலான பா.ஜ.க.ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் மூத்த தலைவரும் வெளியுறவுத்துறை இணைஅமைச்சருமான எம்.ஜே .அக்பர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
 
அமெரிக்காவை சேர்ந்த  பெண்பத்திரிக்கையாளர் ஒருவர் எம்.ஜெ.அக்பர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். 2007 ல் ஆசிய ஏஜ் செய்திதாளில் பணியார்றும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறிய அவர் அப்போது அக்பர் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தார் என தெரிவித்திருந்தார். 
 
சமீபத்தில், மத்திய அமைச்சர் எம்.ஜெ.அக்பர் தன் மீதான பாலியல் புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என காங். வலியுறுத்தியது.
 
ஆனால் இந்த புகார் குறித்து  மத்திய அமைச்சர் எந்த பதிலும் அளிக்காததால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம்  அவர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை வைத்தனர். 
 
இந்நிலையில் இன்று அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் தாக்கத்தால் எம்.ஜே அக்பர் தாமாக முன்வந்து பதவி விலகினார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்