நுரையீரல் மற்றும் சளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை முழுவதுமாக தடுக்கும் தன்மை தேனிற்கு உள்ளதாம். சளியை முற்றிலுமாக உடலில் இருந்து நீக்கும் தன்மை தேனில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் சிறப்பான தேர்வாகும்.
ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வருவதும் நல்லது. நீராவி பிடிப்பதும் சளியை விரட்டும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் மூலிகைகளையோ, ஆவி பிடிக்கும் மாத்திரையையோ போட்டு தலையை துணியால் மூடி நீராவியை முகத்தில் பிடிக்கலாம்.