ஈபிஎஸ் கைக்குள் அமைச்சர்கள்... ஆதரவாளர் நம்பி ஏமாறப்போகும் ஓபிஎஸ்?

செவ்வாய், 6 அக்டோபர் 2020 (10:37 IST)
18 அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர்  என தகவல். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. சொந்த ஊரில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதேபோல ஈபிஎஸ் இங்கு அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 
 
துணை முதல்வருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஆம், 18 அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். 
 
எனவே, ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் உயர் பதவியை வழங்கி அவரை சமரசம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்