ஜனவரி மாதம் வரும் பொங்கல் விழாவிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் செய்ய தேவையான அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், ரொக்க பணமும் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடம் திறந்தவெளி வாகனத்தில் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். ஆனால், திமுகவினர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். நீதிமன்றம், பொங்களுக்கு பின் மக்களுக்கு பரிசுத் தொகை வழங்கலாம் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தலில் வாக்களித்த பின், ஆயிரம் ரூபாய் பொங்கள் பரிசை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.