அதிமுக ஆட்சியை கலைத்துவிடுவேன், வீட்டுக்கு அனுப்பிவிடுவேன், ஆட்சியை மாற்றுவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் லட்சம் முறை கூறிவிட்டார். ஆனால் அது எதுவுமே இதுவரை நடக்கவில்லை. இனிமேலும் நடக்காது. அவர் 'மாதிரி சட்டசபை'யை கூட்டுகிறார், 'மாதிரி கிராமசபை'யை கூட்டுகிறார், ஒரு மாதிரியாக பேசுகிறார், மொத்தத்தில் அவர் ஒரு மாதிரியாக மாறிவிட்டாரோ என தமிழ்நாட்டு மக்கள் சந்தேகப்படுகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும் 'அதிமுக அமைத்துள்ள கூட்டணி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாவின் ஆசியால் அமைந்த கூட்டணி, இந்த கூட்டணியால் இன்னும் பல திருப்பங்கள் ஏற்படும், அந்த திருப்பங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலன் உடையதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்