கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டேன்: பிரபல நடிகர் ஓப்பன் டாக்!!!

வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (08:32 IST)
திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தாம் அவதிப்பட்டதாக நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
பிதாமகன் படத்தின் மூலம் கஞ்சா குடுக்கி என்ற கேரக்டரில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. இவரது இயற்பெயர் கறுப்பு இராஜா. பின்னர் ராம், பருத்திவீரன், சுப்ரமணியபுரம்,களவாணி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.
 
தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ள கஞ்சா கருப்பு, நான் திருமணம் செய்ய முடிவெடுத்த போது எனக்கு பெண் கிடைக்காமல் அவதிப்பட்டேன். ஏன்னா நான் சினிமாகாரன். ஆதலால் எனக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதற்கிடையே என் அப்பா நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள டாக்டர் வேண்டும்.
 
எனவே ஒரு டாக்டர் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். பின்னர் தான் என் வீட்டில் சங்கீதாவை பெண் பார்த்துவிட்டு வந்தனர். கட்டுனா அந்த பெண்ணை தான் கட்ட வேண்டும் என ஸ்ட்ரிக்டாக கட்ட வேண்டும் என கூறினர்.

இதையடுத்து நானும் சங்கீதாவும் போனில் மனசுவிட்டு பேசினோம். இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துபோய்விட்டது. பின்னர் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு 2 பிள்ளைகள். சந்தோசமாக இருக்கிறோம் என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்