மின்கட்டணம் செலுத்துவதற்கு ஏப்ரல் 14 முதல் வரை காலக்கெடு விதித்து இருப்பதாகவும், ஒருவேளை 14ம் தேதிக்குள் கட்டவில்லை என்றாலும் மின்கட்டணம் தண்டிக்கப்பட மாட்டாது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்
மேலும் மின் கட்டணம் செலுத்துவதற்காக யாரும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் ஆன்லைன் மூலமே மின்சார கட்டணம் செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்துகின்றது. இருப்பினும் ஆன்லைன் மூலம் செலுத்த தெரியாதவர்களை கருத்தில் கொண்டு ஏப்ரல் 14ம் தேதி வரை மின் கட்டணம் கட்டவில்லை என்றாலும் மின் துண்டிப்பு இருக்காது என்றும் இது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி தகுந்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார்
மேலும் தற்போது காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம், மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரம் ஆகியவை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் மின்வெட்டு ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்