தமிழக மின்சார வாரியம் தற்போது ஒரு லட்சத்துக்கு 33 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருக்கும் நிலையில்,. தனியார் உற்பத்தியாளர்கள், காற்றாலை உற்பத்தியாளர்களிடம் இருந்து வர வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் கோடி நிலுவை தொகை இன்று வரை வாரியத்திற்கு வரவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், மின் துறை நிதிச்செயலர் மற்றும் வாரியத்தின் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாகவும், இதுதொடர்பாக தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொறியாளர்கள் அமைப்பு தலைவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.