உபேர், ஸ்விக்கி நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்ய அனுமதி

புதன், 25 மார்ச் 2020 (13:02 IST)
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் அத்தியாவசிய தேவை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும் அனைத்து சேவைகளும் முடக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமைட்டோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உணவு டெலிவரி செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள புதிய அறிவிப்பின்படி ஆன்லைன் உணவு நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமைட்டோ, உபேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உணவு டெலிவரி செய்ய அனுமதி அளித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் உணவுகளை டெலிவரி செய்யும் நபர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளுடன் உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மளிகைப் பொருட்களையும் வீடுகளுக்கு விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், டெலிவரி செய்யும் நபர்கள் முகக்கவசம் கையுறை அணிந்து செல்வது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்