தமிழகத்தில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

புதன், 21 ஜூன் 2023 (12:23 IST)
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
 
திமுக தேர்தல் அறிக்கையின் போது மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு வருடம் ஆகியும் இன்னும் மாதந்தோறும் மின்கணக்கீடு எடுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்தோறும் மின் கணக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று மின்சார துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன் மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியும் இதே கருத்தைதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்