சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தும் போது, அந்த திட்டம் மக்களுக்கு எந்த அளவுக்கு பலன் அளிக்கிறது என்று ஆராய்ந்து, அதை இன்னும் செம்மைப்படுத்த முனைவது அரசின் கடமை. அந்த வகையில்தான் மாநில திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த ஆய்வின் முடிவில், கட்டணமில்லா பயணம் மூலம் சராசரியாக ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.88 பேருந்து கட்டணமாக செலவிட்டது மிச்சமாகிறது என்பது தெரியவந்தது. அதன் அடுத்த கட்ட ஆய்வு தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு இந்த திட்டம் பயன்படுகிறது என்று ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அறிந்து, அதை இன்னும் கூர்மைப் படுத்துவதுதான் இதன் நோக்கம். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.