நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் குறைப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

வியாழன், 23 நவம்பர் 2023 (17:49 IST)
கொரோனா பாதிப்பு இருந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பதால் அவர்களுடைய வசதிக்காக நீட் தேர்வு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
 
கொரோனா காலத்தில் சிபிஎஸ்இ மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.  கொரோனா காலத்தில் சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு படிப்பதால் சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டதோ அந்த அளவுக்கு நீட் தேர்வு பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
 
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் தவிர்த்து மீதம் இருக்கும் பாடத்திட்டத்தில் எந்தெந்த பாடங்களை மாணவர்கள் பயில வேண்டும் என்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் இல்லாமல் நீட் தேர்வுக்கு தயாராக முடியும். 
 
 மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடைபெறும் நிலையில்  அடுத்த ஆண்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்