அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு..நீதிபதி அல்லி உத்தரவு

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (15:09 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் ஏற்கனவே ஆறு முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏழாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கைது செய்த நிலையில்  தற்போது அவர் புழல் சிறையில் காவலில் உள்ளார். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற  நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம்  செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை அக்டோபர் 13 வரை காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற  நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்