புகையிலை கடத்தல் வழக்கில் ரூ.25,000 அபராதம்.. அபராத தொகையில் புத்தகங்கள் வாங்க உத்தரவு..!

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (11:15 IST)
தமிழ்நாடு அரசால் தடை செய்யபட்ட குட்கா புகையிலை கடத்தல் வழக்கில் கைது செய்யபட்டவர் ஜாமின் கோரிய வழக்கில்  ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் இந்த அபராத தொகையான ரூ. 25 ஆயிரத்திற்கு மதுரை கலைஞர் நூற்றண்டு நூலகத்திற்கு சட்ட புத்தகங்கள் வாங்குவதற்கு வங்கி கணக்கில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது என்பதும் இந்த நூலகத்தில் பல அரிய நூல்கள் இருப்பதை அடுத்து மதுரை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் பெற்ற தொகைக்கு புத்தகம் வாங்க நீதிபதி உத்தரவிட்டதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்